புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் தனுஷ்

Bookmark and Share

புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் தனுஷ்

தனுஷ் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தியில் ‘அனேகன்’ படமும், பாலிவுட்டில் பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ படத்திலும் நடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி’ படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை 2’ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2006-ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை’ படம் வெளியானது. இதில் சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஆக்‌ஷன் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் இடையே அதிகம் கவரப்பட்டது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து செல்வராகவன் ‘புதுப்பேட்டை 2’ படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கதை விவாதம் நடந்து வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வந்துள்ளது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions