ஜெய்யின் புகழ் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

ஜெய்யின் புகழ் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புகழ்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இப்படத்தை ‘உதயம் என்.எச்.4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையில் அனிருத் பாடிய பாடல் ஒன்று ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடமே முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்பி இருந்தனர். படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி இருந்தது.

இதையடுத்து இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை மார்ச் 18ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் மணிமாறன் தனது ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.


Post your comment





Related News
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஜெய்யின் ரகசிய புகைப்படம் வெளியானது!
நாளை முதல் திரையில் கலக்க வரும் ‘புகழ்’ !
ஜெய்யின் புகழ் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
புகழ் படத்தை வாங்கிய அயங்கரன் நிறுவனம்!
ஜூலை 3ஆம் தேதி வெளியாகிறது புகழ் இசை
‘நீயே வாழ்கை என்பேன், இனி வாழும் நாட்கள் என்பேன்...’ தமிழிலும் ‘புகழ்’ அடைவாரா அரிஜித் சிங்
ஜெய்யின் புகழ் பாடும் ’புகழ்’ தயாரிப்பாளர்
\'புகழ்\' எல்லா தரப்பு மக்களையும் கவரும் படமாகும்!
ஜெய் \'புகழ்\' பெற்றார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions