புலி படத்தின் கூட்டணி மீண்டும் இணைகிறது

Bookmark and Share

புலி படத்தின் கூட்டணி மீண்டும் இணைகிறது

விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய ‘புலி’ படம் கடந்த வருடம் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். கவிஞர் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார். 

இந்நிலையில், விஜய் நடிக்கும் 60-வது படத்திற்கும் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்துவே பாடல்களை எழுதவுள்ளார். விஜய் தற்போது தனது 59-வது படமான ‘தெறி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு 60-வது படமாக ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். 

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் வைரமுத்துவே எழுதவுள்ளார். ‘புலி’ படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்-வைரமுத்து கூட்டணி மீண்டும் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் ஒருசில வாரங்களில் இந்த படம் குறித்த அனைத்து தகவல்களும் உறுதியாகும் என தெரிகிறது. 

தற்போது இந்த படத்திற்கான வசனங்கள் மற்றும் லொக்கேஷன் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions