புலி பட இசை வெளியீட்டுவிழா எங்கே?

Bookmark and Share

புலி பட இசை வெளியீட்டுவிழா எங்கே?

விஜய் நடிக்கும் புலி படத்தின் இறுதிகட்டப்பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீஸர் கடந்த 21-ஆம் தேதி வெளியாகி மாபெரும் சாதனை படைத்து வருகிறது.

கடந்த 21-ஆம் தேதி வெளியான  புலி டீஸரை இதுவரையில் 45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். விஜய் நடித்த படங்களில் இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது! இதனால் விஜய்யின் ரசிகர்கள் மிகப்பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் வருகிற ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளனர் புலி படக்குழுவினர்.

ஷங்கரின் ஐ பட ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற தமிழ்ப்பட இசைவெளியீட்டுவிழாவிலேயே பிரம்மாண்டமான விழா ஐ இசைவிழாதான்.

ஷங்கரின் ஐ பட ஆடியோ வெளியீட்டு விழாவை மிஞ்சுகிற அளவுக்கு   புலி பட ஆடியோ விழாவை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம் விஜய். எனவே இப்போது அதற்கான இடத்தை தேர்வு செய்வதில் புலி படத்தின் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

ஐ படத்தின் ஆடியோ விழா நடைபெற்ற நேரு ஸ்டேடியத்தில் நடத்தலாமா... அல்லது புலி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற ஆதித்யாராம் ஸ்டுடியோவில் நடத்தலாமா என யோசித்து வருகின்றனர்.

ரசிகர்களின் தொல்லை இல்லாமல் நடத்த ஆதித்யாராம் ஸ்டுடியோவில் நடத்துவதே நல்லது என்று நினைக்கிறார்களாம்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions