3500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கப் போகும் புலி?

Bookmark and Share

3500 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கப் போகும் புலி?

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இப்பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியன்று படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படத்தை உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக சுமார் 3500 திரையரங்குகளில் வெளியிடப்போவதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு, சைனீஸ், ஜப்பானிஸ் ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர். 

3500 திரையரங்குகளில் இப்படம் வெளியானால் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் படம் என்ற சாதனையை ‘புலி’ படைக்கும் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions