தாய்லாந்து புலி கோவிலில் மங்களகரமாக முடிந்த புலி படப்பிடிப்பு

Bookmark and Share

தாய்லாந்து புலி கோவிலில் மங்களகரமாக முடிந்த புலி படப்பிடிப்பு

விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கி புலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் தலக்கோணம் அருகில் அடர்ந்த காட்டுப் பகுதியிலும் நடைபெற்றது.
இதையடுத்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்காக தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் புலி படக்குழு முகாமிட்டிருந்தது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் ஸ்ருதிஹாசனே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தாய்லாந்தில் புகழ்பெற்ற புலி கோவில் முன் மங்களகரமாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்றார்.
படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக களமிறங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்.
முன்னதாக, இப்படத்தை ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால், கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், படத்தை செப்டம்பர் 17-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், நான் ஈ சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions