புலி டீசர் ரிலீஸ் : ரசிகர்களுக்கு டபுள் டிரீட்

Bookmark and Share

புலி டீசர் ரிலீஸ் : ரசிகர்களுக்கு டபுள் டிரீட்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புலி படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகியிருந்த நிலையில், படத்தின் டீசரும் வெளியாகி, விஜய் ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை தந்துள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் புலி. இந்த படம், ராஜா காலம் மற்றும் நகரத்து கெட்டப்புகளில் படம் உருவாகியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் விஜய்யின் பிறந்தநாள், நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி, படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக்கும், டீசரும் ஒருநாளுக்கு முன்னதாக, இன்றே வெளியிடப்பட்டது.

புலி படத்தின் ஸ்டில்கள், சமூகவலைதளங்களில் வெளியானதையே, ஹேஸ்டாக் டிரெண்டிங் செய்து திருவிழாவாக கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு, இன்று வெளியான பர்ஸ்ட்லுக்கும், டீசரும் ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

நாளை வெளியாக இருந்த படத்தின் டீசர், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானதை அறிந்த படக்குழுவினரே, ஒருநாளுக்கு முன்னதாக, படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions