24 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியனைத் தொட்ட புலி டீசர்

Bookmark and Share

24 மணி நேரத்திற்குள்ளாக 1 மில்லியனைத் தொட்ட  புலி டீசர்

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும்  புலி படத்தின் டீசர் நேற்று மதியம் வெளியிடப்பட்டது.

24 மணி நேரத்திற்குள்ளாக 10 லட்சம் பேர் அதை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர். விஜய் நடிக்கும் படங்களுக்கு சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் அமோக ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

யூடியூப் ஹிட்ஸ் பொறுத்தவரையில் விஜய் படங்களுக்கும், அஜித் படங்களுக்கும் இடையே எப்போதுமே பலத்த போட்டி நிலவி வரும். கத்தி படம் வெளிவந்த போது கூட முதல் பார்வை, டீசர், டிரைலர் என அனைத்துமே சாதனை படைத்தது.

படம் வெளிவந்து மாபெரும வெற்றியும் பெற்றது. சமீபத்தில்தான் பாகுபலி  படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.

தெலுங்கு நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள அந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் அப்படி ஒரு படம் தமிழில் உருவாகாதா என பேச ஆரம்பித்தனர். ஆனால், புலி படத்தின் டிரைலரைப் பார்த்ததும் பாகுபலி படத்திற்கு இணையாக தரத்திலும் சிறந்து விளங்குவதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என தமிழ்த் திரையுலகில் சிறந்த நட்சத்திரங்கள் நடிப்பதால் 'புலி' படத்திற்கான எதிர்பார்ப்பு டீசர் வெளியானதற்குப் பிறகு பல மடங்கு அதிகரித்துள்ளது.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions