அஜித் பட சாதனையை முறியடித்த புலி

Bookmark and Share

அஜித் பட சாதனையை முறியடித்த புலி

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் டீஸரை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இம்மாதம் 22 அன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட திட்டமிட்டனர். அதற்கு முன்னதாக இணையவெளியில் லீக் ஆனது புலி டீஸர். எனவே அதிரடியாக, கடந்த 21ஆம் தேதி மதியம் 2 மணிக்கே யு டியூப்பில் வெளியிடப்பட்டது.

திட்டமிட்டபடி இந்த டீஸர் வெளியாகவில்லையென்றாலும், புலி படத்தின் மீதிருந்த மக்களின் எதிர்பார்ப்பு காரணமாக, எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் இந்த டீஸருக்கு வரவேற்பு கிடைத்தது.

டீஸர் வெளியான முதல் 21 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் அதை பார்த்து ரசித்தனர். அடுத்த 12 மணி சேரத்தில் அதாவது 33 மணி நேரத்தில் 15 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர் 45 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்த புலி டீஸர் தற்போது 60 மணி நேரத்தில் 27 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. விஜய் நடித்த படங்களிலேயே குறைந்த நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது புலி படத்தின் டீஸர்தான்.

அதோடு தென்னிந்திய சினிமாவில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த டீஸர்களில் ஐ படத்திற்குப் பிறகு 2ஆவது இடத்தைப் பிடித்து சாதித்திருக்கிறது 'புலி' டீஸர். ஐ படத்தின் டீஸர் வெளியான 35 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களையும், 45 மணி நேரத்தில் 25 லட்சம் பார்வையாளர்களையும் சென்றடைந்தது. அதுவே இப்போது வரை தென்னிந்திய சினிமாவின் உச்சபட்ச சாதனையாக இருக்கிறது.

ஐ படத்தை அடுத்து  என்னை அறிந்தால்' படத்தின் டீஸர் 48 மணி நேரத்தில் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து 2வது இடத்திலிருந்தது. இந்த சாதனையை முறியடித்து புலி டீஸர் தற்போது 2ஆம் இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

டீஸர், மற்றும் டிரைலர்களின் லைக்கைப் பொறுத்தவரை இப்போதுவரை என்னை அறிந்தால் டீஸரே இந்திய அளவில் 2 ஆம் இடத்திலும், தென்னிந்திய அளவில் முதலிடத்திலும் இருக்கிறது. முதல் 35 மணி நேரத்தில் 42 ஆயிரம் லைக்குகளை எட்டிய என்னை அறிந்தால்  டீஸர் தற்போது 94 ஆயிரம் லைக்குகளோடு உச்சத்தில் இருக்கிறது.

புலி படத்தின் டீஸருக்கு 45 மணி நேரத்தில் 37 ஆயிரம் லைக்குகள் கிடைத்தன. 6 ஆயிரம் அன்லைக்குகளுடம் கிடைத்தன. தற்போதைய நிலவரப்படி 41833 லைக்குள் கிடைத்துள்ளன.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions