தடுமாறுகிறது மற்ற படங்கள் – புலி ரிலீஸ் தள்ளிவைப்பால்..

Bookmark and Share

தடுமாறுகிறது மற்ற படங்கள் – புலி ரிலீஸ் தள்ளிவைப்பால்..

ஒரு பெரிய படத்தின் ரீலீஸ் தேதியில் எதிர்பாராமல், திடீரென ஏற்படும்  குழப்பத்தால்  மற்ற சில படங்களின் ரிலீஸில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.

செப்டம்பர் மாதத்தில் 4ம் தேதி பாயும் புலி படமும், 17ம் தேதி புலி படமும் வெளிவருவதாக செய்தி கசிந்தன. அதனைப் பொறுத்தே மற்ற சில தயாரிப்பாளர்களும் தங்களது  படங்களை முன்னும் பின்னும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.  

தற்போது பாயும் புலி திட்டமிட்டபடி 4ம் தேதி வரும் நிலையில், புலி படத்தின் வெளியீடு அக்டோபர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால்  தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை செப்டம்பர் மாதத்தில் வெளியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் பெரிய படங்கள் வெளிவர  உள்ளதால் பெரிய படங்களுக்கிடையில் தங்களது சிறிய படங்களை எப்படி வெளியிடுவது என சிறிய படத் தயாரிப்பாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  

பாயும் புலி, சவாலே சமாளி, யட்சன்  உள்ளிட்ட படங்கள்  வெளிவரும் போது  இன்னும் பல சிறிய படங்களும் வெளிவர உள்ளன. அதனால் இனி வரும் காலங்களில் படங்களை வெளியிடவும், தியேட்டர்களைப் பிடிப்பதிலும் கடுமையான போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions