‘புலி’ க்ளைமாக்ஸ்; ராஜாவாகிறார் விஜய்!

Bookmark and Share

‘புலி’ க்ளைமாக்ஸ்; ராஜாவாகிறார் விஜய்!

குழந்தைகளுக்கான படமாகவும் அதேநேரம் நிகழ்கால அரசியலைச் சீண்டும் வலிமையான படமாகவும் ரிலீஸாகிறது ‘புலி’. 118 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் ‘புலி’ படத்தில் ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்திருக்கிறார்.  

இதில் அரசியாக நடித்திருக்கும் ஸ்ரீதேவிக்கும் விஜய்க்கும்தான் மோதல்.  இதைவைத்து ஜெ – விஜய் மோதல்தான் படத்திலும் காட்சியாக்கப்பட்டிருக்கிறது என அனுமானங்கள் அலையடிக்கத் தொடங்கிவிட்டன.  

அதை உண்மையாக்குவதுபோல், ‘நீங்க நல்லவங்கதான். ஆனா, உங்களைச் சுத்தி இருக்கிறவங்க சரியில்லையே… நீங்க திருந்தினால் போதும்’ என உள்குத்து வசனங்களும் ‘புலி’ படத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

இறுதியில் விஜய்யின் நேர்மையான செயல்பாடுகளைக் கண்டு மனம் திருந்தும் ஸ்ரீதேவி, தனது கிரீடத்தைக் கழட்டிக் கொடுத்து, ‘நீதான் இந்த நாட்டை ஆளணும்’ எனச் சொல்ல, அதனை விஜய் பெற்றுக் கொள்கிறார்.

கிரீடத்தைத் தலையில் வைத்து விஜய் ராஜாவாக மாறும் போது மக்கள் ஆரவாரித்துக் கொண்டாடுகிறார்கள். அதோடு படம் நிறைவு பெறுகிறது. ‘புலி’ படத்தின் இந்த க்ளைமாக்ஸ் காட்சி விஜய் ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions