'புலி' வியாபார சிக்கல்? : ரிலீசுக்கு முன்பே உஷாரான விஜய்!

Bookmark and Share

'புலி' வியாபார சிக்கல்? : ரிலீசுக்கு முன்பே உஷாரான விஜய்!

லிங்கா பட விவகாரத்தில் ரஜினியின் இமேஜை எவ்வளவு தூரத்துக்கு கெடுக்க முடியுமோ அவ்வளவு தூரத்துக்கு கெடுத்தார்கள் சிங்காரவேலன் தலைமையிலான தமிழக வினியோகஸ்தர்கள்.

முந்தைய சில படங்களில் நஷ்டஈடு கொடுத்து வந்த ரஜினி அவர்கள் மீது இரக்கப்பட்டு இப்படத்திலும் ஏற்படும் நஷ்டஈட்டை திருப்பித் தரும் முடிவில் தான் இருந்தார்.

ஆனால் வினியோகஸ்தர்களின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகப் போகவே எனக்கும் தயாரிப்புக்கும் சம்பந்தமே இல்லை. நான் ஒரு ஹீரோவாக நடித்தேன் அவ்வளவு தான் என்று ஒதுங்கிக் கொண்டார்.

இன்றுவரை முடிவு எட்டப்படாமல் கோர்ட்,கேஷ் என்று தொடர்கிறது லிங்கா இழப்பீடு விவகாரம்.ரஜினிக்கு நேர்ந்த இந்த அவமானத்தைப் பார்த்த விஜய் உஷாராகி எங்கே இதே போல தன்னுடைய புலி படத்துக்கும் வினியோகஸ்தர்கள் இழப்பீடு கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தால் என்ன செய்வது என்று யோசித்தவர் உடனடியாக புலி படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நேரில் அழைத்தாராம்.

வியாபாரம்னு வந்தா லாப, நஷ்டம் வர்றது சகஜம் தான். ஒருவேளை புலி படத்துல உங்களுக்கு நஷ்டம் வந்தா எந்தக் காரணத்தை கொண்டும் இழப்பீடு கேட்கக்கூடாது என்று கண்டிஷனாக சொல்லி விட்டாராம்.

அதற்கு ஒப்புக்கொண்ட வினியோகஸ்தர்களுக்கே புலியின் வினியோக உரிமையை கொடுத்திருக்கிறார் விஜய்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions