கோலிவுட்டை கலக்கும் விலங்கு படத்தலைப்புகள்

Bookmark and Share

கோலிவுட்டை கலக்கும் விலங்கு படத்தலைப்புகள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றார்போல் பட தலைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஒரு காலத்தில் ஊர் பெயர்களை கொண்ட படங்கள் வெற்றியடைந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. பின்பு அதுவே காலம் மாறி தற்போது விலங்கு பெயர்களை கொண்ட படங்கள் அதிகம் வெளியாகி வருகின்றன.

ஏற்கனவே விலங்கு பெயர்களை கொண்டு வெளியான ‘சிங்கம்’, ‘மைனா’, ‘சிறுத்தை’, ‘வேங்கை’, ‘நான் ஈ’, ‘கும்கி’, ‘கழுகு’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது.

இதனால் பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் விலங்கு பெயர்களை வைக்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர். தற்போது விலங்கு பெயர்களை கொண்டு அதிக படங்களும் உருவாகி வருகின்றது.

விஜய் நடிக்கும் ‘புலி’, விஷாலின் ‘பாயும் புலி’, வடிவேலுவின் ‘எலி’, விமலின் ‘மாப்ள சிங்கம்’, பாபி சிம்ஹாவின் ‘பாம்பு சட்டை’, ஜீவனின் ‘ஜெயிக்கிற குதுரை’, தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ ஆகியவை ரிலீசாக காத்திருக்கின்றன. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions