புலி இன்னொரு லிங்காவா?

Bookmark and Share

புலி இன்னொரு லிங்காவா?

கத்தி படத்துக்கு எழுந்த எதிர்ப்பே மிகப்பெரிய பப்ளிசிட்டியாகி அப்படத்தை பெரிய வெற்றிப்படமாக்கியது. அதனால் கத்தி படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புலி படத்துக்கு விஜய்யின் ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி நடிக்கின்றனர்.விஜய்யின் மாமியாராக நடிக்கும் ஸ்ரீதேவிக்கு மகாராணி வேடம். அவரது தளபதியாக சுதீப் நடித்து வருகிறார்.

புலி படத்திற்கு நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். கத்தி படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் படம் இது என்பதாலும் கத்தியை போல இப்படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பதால் புலி படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலில் இருக்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்! ரசிகர்களின் ஆவலைப்புரிந்து கொண்டு புலி படத்தை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக அமையும் என்பதால் எப்படியாவது புலி படத்தை ஜூன் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்தாக வேண்டும் என்று விஜய்யும் சொல்லிவிட்டாராம்.

எனவே, மெதுவாக நடைபெற்று வந்த பட வேலைகளை விரைந்து முடிக்கும்படி முடுக்கி விட்டுள்ளார்களாம்!லிங்கா படத்தை அவசரஅடியாக அடித்ததால்தான் படம் ப்ளாப்பானதாக பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இப்போது புலி படத்தையும் அவசர அவசரமாக எடுத்தால் தரமானதாக இருக்குமா? என்ற கேள்வி விநியோகஸ்தர்கள் தரப்பில் எழுந்துள்ளது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions