மோகன்லால், பிரபு நடிக்கும் புலிமுருகன்

Bookmark and Share

மோகன்லால், பிரபு நடிக்கும் புலிமுருகன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இங்கே ரஜினி முருகன் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்க, மலையாளத்திலோ புலி முருகன் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார்.

அவருடன்  நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு - மோகன்லால் இருவரும் ஏற்கனவே காலாபாணி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். பிரபு - மோகன்லால் இவர்களுடன் 60 தென்னிந்திய நடிகர்கள் - நடிகைகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

'போக்கிரி ராஜா', 'கசின்ஸ்' உட்பட பல வெற்றி படங்களை இயக்கிய வைசாக் இந்தப் படத்தை இயக்குகிறார். புலிமுருகன் படத்தில் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான ஒரு ஆக்ஷன் கேரக்டரில் நடிக்க உள்ளார்  மோகன்லால்.

மலையாள சினிமாவை பொருத்தவரையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மம்முட்டி நடித்த 'பழசிராஜா' படம்தான். அப்படத்தின் தயாரிப்பு செலவு 25 கோடி ரூபாய்!  புலிமுருகன் படம் ஆக்ஷன் படம் என்பதால் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்  பீட்டர்ஹெய்னை இப்படத்தின் சண்டைப்பயிற்சியாளராக கமிட் செய்து உள்ளனர். இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை வியட்நாமில் படமாக்க உள்ளனர்.

 


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions