தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பேச தயாராகும் ‘புலிமுருகன்’!

Bookmark and Share

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பேச தயாராகும் ‘புலிமுருகன்’!

மோகன்லால், கமாலினி முகர்ஜீ, ஜெகதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் முலக்குப்படம் பிலிம்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் “புலி முருகன்” வெளியிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் திரைப்படம் மோகன்லாலின் திரைத்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

இப்படத்தின் மற்ற மொழி உரிமையை பெற பலர் போட்டியிட இறுதியில் புலிமுருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார்.

பாகுபலி படத்திற்கு பிறகு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தில் நடிக்க உச்ச நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

புலிமுருகனின் இந்திய மொழிகள் பதிப்பை ரமேஷ்.பி.பிள்ளையின் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் தோமிச்சனின் முலகுப்பாடம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.
விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் விரிவான செய்திகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும் எனத் தயாரிப்புதரப்பு கூறியுள்ளது.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions