புலி ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாக இருக்கும்: நட்டி

Bookmark and Share

புலி ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாக இருக்கும்: நட்டி

நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்னும் நட்ராஜ், தற்போது விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர் ‘மிளகா’, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

பாலிவுட்டில் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். புலி படத்திற்கு இவர் ஒளிப்பதிவு செய்வது தமிழில் இரண்டாவது படமாகும். இதற்கு முன் விஜய் நடிப்பில் பதிமூன்று வருடங்களுக்கு முன் வெளியான ‘யூத்’ படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இவர் புலி படத்தை பற்றி கூறும்போது, நான் புலி படத்தின் எந்த விஷயத்தையும் சொல்லக் கூடாத கட்டாயத்தில் இருக்கிறேன். தயாரிப்பாளரும், இயக்குனரும் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் படத்தைப் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வேன்.

ஆனால் நிச்சயம் இப்படம் ஆச்சரியங்கள் நிறைந்த சிறந்த படமாகவும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படமாக இருக்கும் என்றும், எனக்கு இப்படத்தில் ஒளிப்பதிவு வாய்ப்பு கொடுத்த விஜய்க்கு நன்றியும் கூறினார்.

சிம்புதேவன் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் சுருதிஹாசன் நடிக்கிறார்கள். ஸ்ரீதேவி மற்றும் சுதிப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படம் விஜய் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது. 


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!
தமிழ் படக்குழுவினரை பிரச்சினையில் இருந்து காப்பாற்றும் நட்டி நடராஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions