புலி புகைப்படத்துக்கெல்லாம் புகாரா ?

Bookmark and Share

புலி புகைப்படத்துக்கெல்லாம் புகாரா ?

புலி படத்தின் புகைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு விட்டதாக படக்குழுவினர் சென்னை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

புலி படத்தின் முதல் பார்வையை விஜய் பிறந்த நாளன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே அதை யாரோ இணையங்களில் வெளியிட்டுவிட்டனர்.

அதே போல டீசரையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே அதை திருட்டுத்தனமாகப் பதிவு செய்த ஒருவர் யு டியூபில் ஏற்றிவிட்டார். அதன் பின் அவரைக் கண்டுபிடித்து கைதும் செய்தனர்.

இதனிடையே இப்படி தொடர்ந்து நடைபெறாமல் இருக்க காவல் துறையிடம் புகார் அளித்துள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்களாம்.

அவர்களது சந்தேகப் பார்வையில் இந்தப் படத்திற்கான டிசைன்களைச் செய்பவர்கள் மீதுதான் அதிகம் திரும்பியுள்ளதாம். இதற்கு முன் இப்படத்திற்காக டிசைன் செய்வதர்கள் புகைப்படங்களை வெளியிட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்டிருக்கிறதாம். இப்போது டிசைன் வேலைகளை மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் செய்து வருகிறது என்கிறார்கள்.

இது ஒரு புறமிருந்தாலும் தமிழ்த் திரையுலகில் இதுவரை புகைப்படத்தை வெளியிட்டதற்கெல்லாம் யாரும் எந்த புகாரையும் அளித்ததில்லை. படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் செல்போன்களில் புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பலர் வெளியிட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் கூட அஜித் நடிக்கும் படத்தின் புகைப்படம் இப்படித்தான் சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது. படத்திற்கான  நெகட்டிவ் பப்ளிசிட்டியா இப்படி சில விஷயங்களை சில மும்பை விளம்பர நிறுவனங்கள் வேண்டுமென்றே செய்து கொடுக்கிறது என்றும் பெயர் வெளியிட விரும்பாத ஒரு மார்க்கெட்டிங் நிபுணர் நம்மிடம் தெரிவிக்கிறார்.

இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை...!


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!
2015 இல் விஜய்!
சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்
விஜய்யின் "தெறி" இறுதிகட்ட படப்பிடிப்பில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions