புலி டீசரின் புதிய சாதனை

Bookmark and Share

புலி டீசரின் புதிய சாதனை

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புலி’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன் மற்றும் ஹன்சிகா நடித்துள்ளார்கள். மேலும் ஸ்ரீதேவி, சுதீப், நந்திதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சிம்பு தேவன் இப்படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் டீசர் விஜய் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. மேலும் குறைந்த நாட்களிலேயே யூடியூப்பில் அதிக பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர். இதுவரை 59 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ள இந்த டீசர் விரைவில் 60 லட்சத்தை தொடவுள்ளது.

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் டீசரில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ஐ’ படத்தின் டீசரை மட்டுமே 60 லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். தற்போது ‘புலி’ டீசர் 60 லட்சத்தை எட்டி ஐ படத்தின் சாதனையை தொடவுள்ளது.

‘புலி’ பாடல்கள் ஆகஸ்ட் 2ம் தேதியும், படம் செப்டம்பர் 17ம் தேதியும் வெளியிட இருக்கிறார்கள்.


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!
2015 இல் விஜய்!
சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்
விஜய்யின் "தெறி" இறுதிகட்ட படப்பிடிப்பில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions