மகாபலிபுரத்தில் புலி இசை வெளியீடு!

Bookmark and Share

மகாபலிபுரத்தில் புலி இசை வெளியீடு!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா நடித்துள்ள புலி படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

இன்னொரு பக்கம், புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.  புலி படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமானமுறையில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் விழா நடக்கும் இடம் முடிவாகவில்லை என்றும் சொல்லப்பட்டது.   லேட்டஸ் தகவல் என்ன தெரியுமா?  புலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்தை இப்போது உறுதி செய்துள்ளனர்.  மகாபலிபுரத்தில் அமைந்துள்ள  Extravagant Confluence Resort-ல் தான் புலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் மிகப் பிரம்மாண்டமானமுறையில் நடைபெறவிருக்கிறது.  புலி படத்தில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர்.

அதோடு, தமிழ் சினிமாவின் மற்ற பிரபல நட்சத்திரங்களும் கலந்து கொள்கிறார்கள்.  விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ரிலீஸ் புலி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்!


Post your comment





Related News
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!
ரசிகர்களுடன் நடிகர் விஜய் ரகசிய ஆலோசனை!
2015 இல் விஜய்!
சென்னையை மீட்போம் - எமிஜாக்ஸன் நன்றிக்கடன்
விஜய்யின் "தெறி" இறுதிகட்ட படப்பிடிப்பில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions