ஒரு நடிகரின் புலிப்பாய்ச்சல்!

Bookmark and Share

ஒரு நடிகரின் புலிப்பாய்ச்சல்!

திருப்பதி பிரதர்ஸ் அப்போது வழக்கு எண் 18-9 படம் எடுக்கும் திட்டத்தில் இருந்த காலம் அது. வேலைகள் தொடங்கி விட்டன. இயக்குநர் பாலாஜி சக்திவேல் நடிக்கும் நடிகர்களை தேர்வு செய்கிற நடைமுறையை செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது  கதாநாயகனாக நடிக்க ஸ்ரீ அப்போது வரை முடிவாகவில்லை. அந்தப் பக்கம் ஒரு வாலிபர் பம்மிப் பதுங்கி போய் நின்றிருக்கிறார். என்ன என்று லிங்குசாமி கேட்டிருக்கிறார். படத்தில் நடிக்க ஆட்கள் தேர்வு செய்வதாகக் கேள்விப் பட்டேன்.

வந்தேன் என்றிருக்கிறார். என்ன ரோல் செய்ய ஆசை என்று லிங்குசாமி கேட்க.. ஏதாவது சின்ன சின்ன வேடம்  இருந்தால் செய்வேன் என்றிருக்கிறார் வந்த இளைஞர்.ஏன் ஹீரோவாக வாய்ப்பு கொடுத்தால்  நடிக்க மாட்டீர்களா என்று கேட்டிருக்கிறார் லிங்குசாமி.

போங்க சார் கிண்டல் செய்யாதீர்கள் என்றிருக்கிறார் அந்தஇளைஞர். ஆனால் அந்த பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18-9 படத்துக்குப் பிறகு அடுத்த படத்தை இன்னமும் இயக்கவில்லை. அதற்குப் பிறகு பிரபலமாகி அந்தநடிகர் எட்டுப் படங்கள் நடித்துவிட்டார்.

அதே திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தில் எட்டாவது படத்தில் நடித்து முடித்தும் விட்டார்.  அந்த நடிகர்தான் சிவகார்த்திகேயன். இந்த தகவலை லிங்கு சாமியே கூறியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சியைப் புலிப்பாய்ச்சல் என்றால் அது மிகையில்லை தானே? எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. இது சிவகார்த்திகேயனுக்கு பொருந்தும் தானே?  இது சொல்லும் நீதி:சினிமாவில் யாரையும் எளிதில் எடை போட்டு விட முடியாது. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions