'புலி' பட்ஜெட் 120 கோடியா ?

Bookmark and Share

'புலி' பட்ஜெட் 120 கோடியா ?

புத்தம் புதிய திரைப்படங்கள் வெளியானால் அந்தப் படத்தின் வசூல் சில நாட்களில் 100 கோடியைத் தொட்டது என்ற தகவலைத்தான் சமீப காலமாக அந்தந்த படங்களின் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.

ஆனால், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் அதைப் பற்றி சொல்வதே இல்லை. சமீபத்தில் 100 கோடியைக் கடந்ததாகச் சொல்லப்பட்ட 'கத்தி, லிங்கா, ஐ, என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைத்தான் ஏற்படுத்தின என்று பின்னர் சொல்கிறார்கள்.

இதனிடையே, தற்போது படத்தின் பட்ஜெட்டையும் அதிகரித்துச் சொல்வது வழக்கமாகி வருகிறது. சராசரியாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கான பட்ஜெட்டை 60 கோடி முதல் 70 கோடி வரை ஆகிறது என்று படத்தின் வியாபாரத்திற்கு முன் செய்திகளை கசிய விடுகிறார்கள்.

ஆனால், அந்தப் படங்களுக்கு அதில் பாதி அளவுதான் செலவு செய்திருப்பார்கள் என்றும் அது பற்றி விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இப்போது விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் பட்ஜெட் சுமார் 120 கோடி என சில நாட்களாக ஒரு தகவலை வெளியில் விட்டிருக்கிறார்கள்.

படத்தில் ஸ்ரீதேவிக்கு சம்பளமாக 5 கோடி, ஒரு பாடலுக்கு 5 கோடி, எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் என அதற்கு சில பல கோடிகள் என படத்தின் மற்ற தயாரிப்புச் செலவுகள், விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா சம்பளம் என மொத்தமாக 120 கோடியை கணக்காகச் சொல்கிறார்களாம்.

உண்மையிலே அவ்வளவு செலவு செய்து எடுத்தால் அதை எப்படி வசூலிக்க முடியும் என்றும் ஒரு கேள்வி எழும். 'புலி' வெளிவருவதற்குள் அது பற்றிய செய்திகளும், தகவல்களும், வதந்திகளும் 'புலி வால்' பிடித்த கதையாகத்தான் போகும் போலிருக்கிறது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions