வேதாளத்தைத் திருப்பித் தாக்கிய புலி

Bookmark and Share

வேதாளத்தைத் திருப்பித் தாக்கிய புலி

ஃபேஸ்புக், டிவிட்டர், யு டியூப் என்றாலே அஜித் ரசிகர்கள் தான் அரசர்கள் என்று இருந்தார்கள். இந்நிலை ‘புலி’ படம் வரும் வரைதான் இருந்தது. ‘புலி’ படத்தின் டீசரும், டிரைலரும் அதிரடியாக லைக்குகள், ஹிட்ஸ்கள் என அள்ளி அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

‘புலி’ படத்தின் டிரைலர் இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற டிரைலர் என்ற பெருமையைப் பெற்றது. அதே சமயம், அந்த டிரைலர் 24,000 டிஸ்-லைக்குகளைப் பெற்றும் சாதனை படைத்தது. அப்போது அந்த வேலையை அஜித் ரசிகர்கள் தான் செய்திருப்பார்களோ என்ற எண்ணம் விஜய் ரசிகர்களிடம் இருந்தது.

அதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவில் வெளியான ‘வேதாளம்’ டீசர் இதுவரை 1,14,000 லைக்குகளைக் கடந்து சாதனை புரிந்து வருகிறது. அதே வேளையில் ‘புலி’ டிரைலருக்குக் கிடைத்த 27,000 டிஸ்-லைக்குகளையும் கடந்து வேதாளம் டீசர் 37,000 டிஸ்-லைக்குகளைத் தாண்டி அதிலும் ஒரு புதிய சானையைப் படைத்துள்ளது.

அன்று அஜித் ரசிகர்கள் புலியைத் தாக்கினார்கள். இன்று புலி, வேதாளத்தைத் திருப்பித் தாக்குகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions