புலியுடன் மோதுவுள்ள ரெளடி?

Bookmark and Share

புலியுடன் மோதுவுள்ள ரெளடி?

விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதால், விஜய் விட்ட இடத்தை பிடிக்க கோலிவுட்டில் பல திரைப்படங்கள் போட்டி போடுகின்றன. 

சிவகார்த்திகேயனின் 'ரஜினிமுருகன்', ஜி.வி.பிரகாஷின் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா', நயன்தாராவின் 'மாயா', மற்றும் கவுண்டமணியின் '49 ஓ' ஆகிய படங்கள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று ரிலீஸாக உள்ளன. 

மேலும் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆர்யா-அனுஷ்காவின் 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம் 'புலி' பட ரிலீஸ் காரணமாக அக்டோபர் இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

எனவே புலி தனியாக பிரமாண்டமாக களமிரங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி - நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை நெருங்கி கொண்டிருக்கும் விஜய்யின் படத்துடன் விஜய் சேதுபதி நடித்த படம் ரிலீஸ் ஆவது இதுவே முதல் முறை. ஆனபோதும் கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதம் விஜய் நடித்த 'கத்தி' படத்துடன் விஷால் நடித்த 'பூஜை' படம் வெளியாகி, இரண்டு படங்களும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions