இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்!

Bookmark and Share

இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்!

விஜய் நடித்து நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட புலி படத்தை மொக்கைப்படம் எனக்கூறியரை, விஜயின் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் யாழ் திரையரங்கில் இடம்பெற்றுள்ளது.

தாவடி கிராமத்தில் இருந்து பட்டணத்தில் படம்  பார்க்க வருகை தந்த இளைஞர் குழு படத்தைப் பார்வையிட்ட பின்னர், அந்தக் குழுவில் இருந்த ஒருவர் ‘புலி படம் மொக்கைப் படம்’ எனக்கூறியுள்ளார். இதனைக் கேட்ட அக் குழுவில் இருந்த மற்றொரு இளைஞர் இவர் மீது கொலைவெறித்தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சண்டையை அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி காயப்பட்டவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

2009 ஆண்டுக்கு முன்னர் இப்படி ஒரு கலாச்சார சீரழிவு இங்கு இருந்ததே இல்லை எனவும்; புலிகளின் காலத்துக்கு பின்னர் தமிழர் வாழ்வியலில் இடம்பெறும் வன்முறை கலாசாரத்துக்கு தென்னிந்திய சினிமாவின் தாக்கமே காரணம் என வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி
புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்?
புலி படத்தில் விஜய் புது கெட்டப்?
\'புலி\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions