இந்தியாவின் நயாகராவில் படமாகும் புலி

Bookmark and Share

இந்தியாவின் நயாகராவில் படமாகும் புலி

விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆந்திரா பகுதியில் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கிய படக்குழு, தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி என்ற சுற்றுலா தளத்திற்கு செல்கிறது.

அதிரப்பள்ளி ‘இந்தியாவின் நயாகரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் சுற்றுலாத்தளமாகும். இது அடர்ந்த காடுகளும், அழகான இயற்கை வளங்களும் நிறைந்த பகுதியாகும்.

இங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் ‘புலி’ படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளனர். இன்னும் இரண்டு வாரங்கள் இங்கு படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீதேவி கபூர், சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு நட்டி நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions