புலிக்கு யாழ்ப்பாணத்தில் சாராய அபிசேகம்

Bookmark and Share

புலிக்கு யாழ்ப்பாணத்தில் சாராய அபிசேகம்

இன்றைய  இலங்கை தமிழர்கள் நிலையை புலி பட வெளியீடு வெளிச்சமிட்டுக்காட்டுவதாக  இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள  திரையரங்கில் நடிகர்களின் கட்டவுட்டுக்கு 2009 ஆண்டுக்கு பின்னர் பால் அபிசேகத்துடன் ஆரம்பித்து இப்போ புலி படத்துக்கு பீர், சாராயங்கள் ஊற்றி அபிசேகம் பண்ணியுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தின் கலாசாரம், பண்பாடு என்பவற்றை சிதைக்கும் நோக்கில் தினம் செயற்பட்டு வருகின்றன சில சக்திகள் அதற்கு துணை போகும் தமிழ் கறுப்பு ஆடுகள் இருக்கும் வரையில் தமிழ் தாழ்வாந்து போகும் என்பது திண்ணமே! 

படித்தோர் பெரியோர் இருந்தும் என்ன பயன். கெடுகிறேன் பந்தையம் பிடி எனும் போக்கில் போய்க் கொண்டிருக்கின்றது தமிழ் இளைஞர்களின் போக்கு.

வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் மத்தியில் நீண்டகாலமாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வந்த கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், வாழ்வியல் அம்சங்சங்கள், வாழ்க்கையின் தேவைப்பாடுகள், இவை எல்லாமே ஏதோ ஒருவகையில் வித்தியாசமான தடத்தில் செல்வதாகப்படுகிறது.  

பாரம் பரிய கலாச்சாரத்தை பேணி வந்த இலங்கை தமிழர்கள் இன்று கலாச்சாரத்தை எப்படி பேணுவது பற்றி யோசிக்க வழி தேட வேண்டியுள்ளது. 

Puli


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions