கேரளாவில் படமாகிறது புலி படத்தின் சண்டைக்காட்சிகள்!

Bookmark and Share

கேரளாவில் படமாகிறது புலி படத்தின் சண்டைக்காட்சிகள்!

இரண்டு காலகட்டத்தில் நடக்கும் கதை அம்சம் கொண்ட ஃபேன்டஸி படம்தான் - புலி. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கி வரும் சிம்புதேவன் ஏன்டா இந்தக்கதையை கையில் எடுத்தோம் என்று நொந்துபோகிறாராம்.

அந்தளவுக்கு கடுமையாக வேலை வாங்குகிறதாம் லொகேஷன் தேடும் பணி. சென்னை உத்தண்டியில் தொடங்கிய புலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அங்கே பாடல், காமெடி, மற்ற காட்சிகள் என படமாக்கப்பட்டன.

தற்போது புலி படத்தில் இடம்பெறும் அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்கத் துவங்கியுள்ளார் சிம்புதேவன். இந்தக்காட்சிகளை படமாக்க பல ஊர்களுக்கு லொகேஷன் தேடி அலைந்திருக்கிறார்.

கடைசியாக, கேரளாவில் உள்ள வாகாமன் நீர்வீழ்ச்சி, அதிரபல்லி மற்றும் மஹோகனி காடு ஆகிய இடங்களை தேர்வு செய்தார். கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கும் புலி படக்குழுவினர், அங்கே வாகாமன் நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.  

அங்கிருந்து ஷிப்ட்டாகி, தற்போது மஹோகனி எனும் இடத்திலுள்ள அடர்ந்த காடுகளில் அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். மன்னர் யுகத்திற்கான சண்டைக்காட்சிகள் இங்கு படமாக்கப்பட உள்ளது. இதை முடித்த பிறகு அதிரபல்லி என்ற இடத்தில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions