தலக்கோணம் காட்டில் 'புலி'

Bookmark and Share

தலக்கோணம் காட்டில் 'புலி'

விஜய் நடிக்கும் படத்திற்கு 'புலி' என்று பெயர் வைத்து விட்டு காடு காடாக சுற்றி படமெடுக்கத்தானே வேண்டும். கடந்த மாதம் கேரளக் காடுகளில் படப்பிடிப்பு நடத்தியவர்கள் தற்போது தலக்கோணம் காட்டில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

கடும் வெயிலுக்கு நடுவில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். விஜய், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள அரங்கில் சில மாதங்களாக நடைபெற்றது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பை கேரள காடுகள், வாகாமன் மலைப் பகுதிகளில் படமாக்கினார்கள்.

தற்போது தலக்கோணம் காடுகளில் படமாக்கி வருகிறார்கள். இந்த மாதத்திற்குள் படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்த மாதம் வெளிநாடுகளில் பாடல் காட்சிகளை படமாக்க உள்ளார்கள்.

அத்துடன் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். படத்தின் படத்தொகுப்பும், மற்ற பணிகளும் கூடவே நடைபெற்று வருகிறதாம். படத்தில் உலகத் தரத்திலான கிராஃபிக்ஸ் காட்சிகளை ஒரு குழு உருவாக்கி வருகிறது.

அது முழுமையாக நிறைவடைந்த பிறகே படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்கள். ஏற்கெனவே 'புலி' படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாகவும் தெரிகிறது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions