புலி படத்திற்கு விஜய்யின் புதிய பிளான்

Bookmark and Share

புலி படத்திற்கு விஜய்யின் புதிய பிளான்

நடிகர் விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்படிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் இப்படத்தின் டப்பிங் பேசுவது, பாடல் பாடுவது என அனைத்து பணிகளையும் முடித்து கொடுத்துவிட்டாராம். எனவே, தனது குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறாராம்.

இவருடைய மனைவி சங்கீதாவின் பெற்றோர்கள் லண்டனில் வசிப்பதால், குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க அங்கு செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் மகன் படித்து வரும் அமெரிக்கன் இண்டர்நேஷனல் பள்ளியில் கோடை விடுமுறை ஜூன் 30-வரை இருப்பதால் அதுவரை விஜய் தனது குடும்பத்துடன் லண்டனில் விடுமுறையை கழிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோடை விடுமுறையை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக அவருக்கு வித்தியாசமான ஹேர் ஸ்டைலை உருவாக்க அட்லி முடிவு செய்திருக்கிறார். விஜய் லண்டன் போய் திரும்பி வந்தபிறகு இதற்கான பணிகளில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions