தளபதி ரசிகர்களின் பணத்தை கொள்ளை கொண்ட புலி கொள்ளைக்கூட்டம்..!

Bookmark and Share

தளபதி ரசிகர்களின் பணத்தை கொள்ளை கொண்ட புலி கொள்ளைக்கூட்டம்..!

புலி படம் அக்டோபர் 1 அன்று காலை 10 மணிக்கு மேல் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இரவு 3.00 மணிக்கே ரிலீஸ் ஆகவேண்டிய புலி படம் வருவாய்துறையினர் நெருக்கடியால், படத்தின் பேலன்ஸ் தொகையை கட்டமுடியாமல் தாமதமாக ரிலீஸ் ஆனது என்பதை இந்த உலகமே அறியும்.

ஆனால் படம் அதிகாலை 3.00 மணிக்கே ரிலீஸ் ஆகி ரசிகர் ஷோ ஓட்டப்பட்டுவிட்டதாக கூறிவருகின்றனராம். சிட்டிசன் படத்தில் கட்டாத ஒரு சுவரை கட்டியதாக கணக்கு காண்பிப்பது போல், ரிலீஸ் ஆவதற்கு முன்பே புலி படத்தை ஓட்டிவிட்டதாக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த திரையரங்கமும் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர்.

புலி படம் அனைத்து தரப்பினரையும், விஜய் ரசிகர்களைகூட திருப்தி படுத்தாததால் படம் எதிர்பார்த்த வசூலை எட்டவில்லை. முதல் மூன்று நாட்கள் வசூல் நன்றாக இருந்தாலும், அடுத்தடுத்த நாட்கள் பல திரையங்குகளில் 20-வற்கும் குறைவானவர்களே படத்தை பார்த்துள்ளனர்.

இப்படி படம் பார்த்தால் புலியை அதிக விலைகொடுத்து வாங்கிய திரையரங்குகள் எல்லாம் விஜய்யிடம் நஷ்ட ஈடுகேட்டாலும் கேட்டுவிடும் என புலி படத்தின் தயாரிப்பாளர் திரையரங்குகளுக்கு புதிய யோசனையை கூறியுள்ளனராம். அதாவது, ரசிகர் சிறப்புக்காட்சியில் படம் பார்பதற்காக 200 முதல் 400 வரை விலை கொடுத்து வாங்கப்பட்ட டிக்கெட்டுகளின் பணத்தை யாருக்கும் திருப்பிக்கொடுக்க வேண்டாம்.

படத்தின் காட்சிகள் போட்டதுபோல கணக்கு காண்பித்து விடுங்கள். அந்த தொகையையும் வசூல் தொகையுடன் சேர்த்துக்கொள்ளுங்கள் எனக்கூறிவிட்டனராம்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions