புலி-க்கு யு

Bookmark and Share

புலி-க்கு யு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படம் வரும் அக்டோபர் 1-ந் தேதி வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் தற்போது இப்படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது. 

இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், ப்ரோமோ பாடல் ஆகியவை வரிசையாக வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதை அடுத்து, இப்படம் தணிக்கை குழு அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும்படி, இப்படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். மேலும் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹான், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி கபூர், பிரபு, வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நடராஜ் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions