புலி - புதிய பயிற்சிகளில் விஜய்!

Bookmark and Share

புலி - புதிய பயிற்சிகளில் விஜய்!

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் 'புலி'. சிம்புதேவன் இயக்கி வரும் இந்தப் படம் சரித்திர காலத்தையும், இன்றைய காலத்தையும் இணைக்கும் ஒரு கதையாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக சென்னைக்கு அருகில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான அரங்கில் படப்பிடிப்பு நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் விஜய் இளவரசராகவும், ஹன்சிகா இளவரசியாகவும், ஸ்ரீதேவி மகாராணியாகவும், சுதீப் தளபதியாகவும், பிரபு ராஜகுருவாகவும் நடிக்கிறார்கள் என  சொல்லப்படுகிறது.

இளவரசரான விஜய், எதிரிகளுடனும், சுதீப்புடனும் போடும் சண்டைக் காட்சிகள் சரித்திர கால முறைப்படி படமாக்கப்பட்டு வருகிறதாம். கத்திச் சண்டை, வாள் வீச்சு போன்றவை இடம் பெறும் சண்டைக் காட்சிகளில் நடிக்க விஜய் சிறப்புப் பயிற்சியை மேற்கொண்டுள்ளாராம்.

நடனம் என்று வந்துவிட்டால் அதில் விஜய்யின் திறமை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு சரித்திரப் படம் என்பதால் அதில் சண்டையையும் தத்ரூபமாகச் செய்ய வேண்டும் என்றுதான் விஜய் இதற்காக சிறப்புப் பயிற்சியாளரை வைத்து சண்டைக் காட்சிகளைக் கற்றுக் கொண்டாராம். அந்த சண்டைக் காட்சிகள் படத்தில் மெய் சிலிரிக்கும் விதத்தில் இருக்கும் என்கிறார்கள்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions