உலவும் 'புலி' கதைகள்...!

Bookmark and Share

உலவும் 'புலி' கதைகள்...!

புலி வருது, புலி வருது என சிறு குழந்தைகளுக்கு பெரியவர்கள் கதை சொல்வது போல தற்போது விஜய் நடித்து வரும் 'புலி' படத்தின் கதை இதுதான் என வழக்கம் போல சிலர் எழுத ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' என்ற சரித்திரப் படத்தை எடுத்து தமிழ்த் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சிம்புதேவன் 'புலி' படத்தை இயக்கி வருகிறார்.

இவருடைய முந்தைய படமான 'ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்' படம் தோல்விப் படமாக அமைந்தாலும் 'புலி' படத்தின் ஃபேன்டஸியான கதை மீது நம்பிக்கை வைத்து சிம்புதேவனுக்கு கால்ஷீட் கொடுத்தார் விஜய்.

முதன் முதலாக பெரிய நடிகர் நடிக்கும் படத்தை இயக்கி வரும் சிம்பு படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்தி வருகிறாராம். இதனிடையே 'புலி' படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும், மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்றும், அதில் ஒரு வேடம் 'குள்ளமான மனிதர்' என்றும் பல்வேறு கதைகள் உலவி வருகின்றன.

சமீபமாக படத்தின் கதையைப் பற்றியும் எழுத ஆரம்பித்து விட்டனர். படப்பிடிப்பு அரங்கிற்குள் காற்றைத் தவிர வேறு எதுவும் புகாதபடி பலத்த செக்யூரிட்டிக்கு நடுவேதான் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

ஓவியரான விஜய் வரையும் ஓவியங்கள் அப்படியே நிஜத்தில் நடப்பது போன்ற 'ஜுமாஞ்சி' படக் கதை சாயலில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளதாகவும் சிலர் எழுத ஆரம்பித்து விட்டனர்.

ஹன்சிகா, ஸ்ருதிஹாசனை விட அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவிக்குத்தான் முக்கியத்துவம் அதிகம், அதற்காகத்தான் அவருக்கு அத்தனை கோடி கொடுத்து அழைத்து வந்திருக்கிறார்கள் என்றும் இன்னொரு பக்கம் பேச்சு இருக்கிறது.

கதை சொல்வதிலும், கதையை எழுதுவதிலும் நம்மவர்களை மிஞ்ச யார் இருக்கிறார்கள். படம் வெளிவருவதற்குள் இன்னும் 'புலி' பற்றி 'கிலி' தரக் கூடிய எத்தனை கதைகள் வர இருக்கிறதோ....


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions