ஒரே நாளில் 8காட்சிகள் புலிக்கு மட்டுமே கிடைத்த பெருமை!

Bookmark and Share

ஒரே நாளில் 8காட்சிகள் புலிக்கு மட்டுமே கிடைத்த பெருமை!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சரித்திர படம் புலி. விஜய் நடித்த முதல் பேண்டஸி படம் என்பதால் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு படத்தின் டிரைலர், புரமோ பாடல் என ஒவ்வொரு வெளியீட்டின் போதும் அதற்கு பெரிய அளவில் லைக் கொடுத்து விஜய்யின் ரேட்டிங்கை உயர்த்தியுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்பார்த்தபடியே புலி படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்தது பெரிய உற்சாகத்தை அளித்திருப்பதோடு, அடுத்து தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்குமா? என்பதை அப்படக்குழு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்திய அளவில் உள்ள தியேட்டர்களில் எந்த படங்கள் வெளியானாலும் ஒரு நாளைக்கு 6 காட்சிகள் தான் திரையிடப்பட்டு வந்தன.

ஆனால் புலி படத்தை முதன்முறையாக தமிழ்நாடு, கேரளாவில் உள்ள சில திரையரங்கங்களில் முதல் இரண்டு நாட்கள் மட்டும் 8 காட்சிகள் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இது திட்டமிட்டபடியே நடந்தால், இந்திய அளவில் முதன்முறையாக ஒரேநாளில் 8 காட்சிகள் திரையிடப்பட்ட முதல் படம் என்கிற பெருமை விஜய்யின் புலி படத்துக்கு கிடைக்குமாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions