புலி படத்தில் விஜய் புது கெட்டப்?

Bookmark and Share

புலி படத்தில் விஜய் புது கெட்டப்?

விஜய்யின் 58-வது படமாக உருவாகி வரும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிவடைந்துவிட்டது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார்.

பேண்டசி படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஜய், இளவரசன் கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் சமீபத்தில் சென்னைக்கு அருகே ஈசிஆர் சாலையில் பிரம்மாண்ட செட் அமைத்து படமாக்கினர்.

இதையடுத்து, ஆந்திரா அருகே தலக்கோணம் பகுதியில் அரசர் காலத்தில் உள்ள வீடுகள் போன்று செட் போட்டு படமாக்கி வருகின்றனர். தற்போது, இந்த படத்தில் விஜய், அபூர்வ சகோதரர்கள் குள்ள கமல்ஹாசனைப் போன்று ஒரு கெட்டப்பில் வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

3 அடி உயரமுள்ள மனிதனாக இவர் வரும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்களாம். இதற்காக அதிநவீன கேமராக்களை உபயோகித்து வருகிறார்களாம். இந்த கெட்டப்பில் விஜய்க்கு ஒரு பாடல் காட்சி வேறு இருக்கிறதாம்.

இந்த கெட்டப் ரகசியத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று புலி படக்குழுவினருக்கு எச்சரிக்கை விட்டிருந்தார்களாம். இருப்பினும், இந்த ரகசியம் வெளிவந்துள்ளது படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், விஜய்யின் இந்த கெட்டப்பை ரசிகர்கள் எந்தளவுக்கு ரசிப்பார்கள் என்ற ஆவலும் எழுந்துள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி கபூர், சுதீப், பிரபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்!
புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி
புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்?
\'புலி\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions