விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து

Bookmark and Share

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டிப்பு விருந்து

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந் தேதி வெளியிடப்போவதாக அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன் சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்க்க ஒவ்வொரு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற ஜூன் 21-ந் தேதி நடுஇரவு 12 மணிக்கு வெளியிடவுள்ளனர். அதைத் தொடர்ந்து 22-ந் தேதி நள்ளிரவு 12-மணிக்கு இப்படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர். இந்த இரண்டு நாளும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்தான்.

புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளனர். நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி கபூர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். பேண்டசி படமாக உருவாகியுள்ள இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் படமாக்கியுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions