புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்

Bookmark and Share

புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘புலி படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருந்தார்கள். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் முதல் வாரத்தில் 71 கோடி வசூல் செய்திருப்பதாக அறிவித்தார்கள். இந்நிலையில், இப்படத்தின் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

இது குறித்து இப்படத்தின் விநியோகஸ்தர் ஒருவர் கூறும்போது, “புலி படம் விஜய் நடிப்பில் உருவான முதல் சரித்திரப் பாணியிலான படம் என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கினோம்.

ஆனால், முதல் இரண்டு நாட்கள் வசூல் நன்றாக இருந்தது. அதற்கு பிறகு அப்படியே குறைந்துவிட்டது. எங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பது உண்மை தான். இது தொடர்பாக விஜய்யை சந்தித்து பேசியிருக்கிறோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!
தளபதி ரசிகர்களின் பணத்தை கொள்ளை கொண்ட புலி கொள்ளைக்கூட்டம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions