புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்?

Bookmark and Share

புலியில் வேட்டைக்காரனாக வரும் விஜய்?

விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பை சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைந்து படமாக்கினர்.

தற்போது, ஆந்திரா அருகே தலக்கோணம் காட்டுப் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது விஜய் வேட்டைக்காரன் மாதிரியான உடையணிந்து நடந்து வரும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

தலக்கோணம் பகுதியில் ஏப்ரல் இறுதி வரை படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கின்றனர். இதற்கு பிறகு சீனா அல்லது கம்போடியாவில் 4 பாடல்களை படமாக்கவுள்ளனர். பேண்டசி படமாக உருவாகிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் ஹன்சிகா இளவரசி வேடத்திலும், சுருதிஹாசன் மாடர்ன் பெண்ணாகவும் வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் ஸ்ரீதேவி கபூர், சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அட்டக்கத்தி நந்திதாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் ஆகியோர் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். 


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
இலங்கை யாழ்ப்பாணத்தில் புலியை மொக்கையென கூறியவர் மீது தாக்குதல்!
புலி படத்தில் ஸ்ரீதேவி காட்சிகள் நீக்கம்…இயக்குனர் மீது சீறிப்பாய்ந்த ஸ்ரீதேவி
புலி டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
புலி படத்தில் விஜய் புது கெட்டப்?
\'புலி\' விஜய் இல்லாமல் ஹன்சிகா ஐரோப்பாவில் என்ன செய்கிறார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions