புலி படத்தில் விஜய்-ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Bookmark and Share

புலி படத்தில் விஜய்-ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் பிரம்மாண்ட படம் ‘புலி’. இப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விஜய் பிறந்தநாளில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அந்த டீசர் பல்வேறு சாதனைகளை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் விஜய்யும், சுருதிஹாசனும் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். 

‘ஏன்டி ஏன்டி’ எனத் தொடங்கும் இந்த பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலை வருகிற ஜூலை 24-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 2-ந் தேதி வெளியிடவுள்ளனர். தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

‘புலி’ படத்தை எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions