ஐதராபாத் செல்கிறார் புலி விஜய்!

Bookmark and Share

ஐதராபாத் செல்கிறார் புலி விஜய்!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படப்பிடிப்பு ஆரம்பத்தில் சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அரண்மனை செட்டில் நடைபெற்றது. விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஹன்சிகா சம்பந்தப்பட்ட சரித்திர கெட்டப் காட்சிகள் அப்போது படமாக்கப்பட்டு வந்தது.

அதோடு காமெடி காட்சிகளும் அங்குதான் படமானது. பின்னர் 2 மாதங்களுக்குப்பிறகு அங்கிருந்து கேரளா சென்றது புலி யூனிட். அங்குள்ள அடர்ந்த காடு மற்றும் மலைப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடந்து வந்தது.

அப்போதுதான் விஜய், ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகள் மட்டுமின்றி, பாடல்களும் படமானது. தற்போது கேரளாவிலும் படப்பிடிப்பு நடத்தி விட்டு சென்னை திரும்பி விட்டனர்.

இதையடுத்து இன்னும் சில நாட்களில் ஐதராபாத் செல்கிறார்கள். அங்குள்ள சில இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் முன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதோடு புலியின் படப்பிடிப்பும் முடிந்து விடும் என்கிறார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த சில காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்படடுவதால், படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர் நடிகைகளும் அந்த ஸ்பாட்டில் ஆஜராக வேண்டும் என்று ஆர்டர் போட்டிருக்கிறார் சிம்புதேவன்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions