புலி கெட்டப்பை பார்த்து: படக்குழுவினர் அதிர்ச்சி

Bookmark and Share

புலி கெட்டப்பை பார்த்து: படக்குழுவினர் அதிர்ச்சி

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு தலக்கோணம் பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது. பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து காட்சிகளை எடுக்கின்றனர். விஜய்யின் அறிமுக பாடல் காட்சியை ஐந்து கோடி செலவில் அரங்கு அமைத்து படமாக்குகின்றனர்.

இதில் விஜய் ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா நடிக்கிறார்கள். முன்னாள் கதாநாயகி ஸ்ரீதேவியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இந்த படத்தில் விஜய் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. அவரது கெட்டப்பும் வெளியிடப்படவில்லை.

விரைவில் விஜய் கெட்டப்பின் முதல் தோற்றத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் இப்படத்தில் விஜய் கெட்டப் புகைப்படம் ஒன்று இன்டர்நெட்டில் திடீரென பரவி உள்ளது. யாரோ திருட்டுத்தனமாக மொபைல் போனில் அவரை படம் எடுத்து இணையதளத்தில் பரவ விட்டுள்ளனர்.

இதுகுறித்து புலி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை வித்யூலேகாராமன் சமூக வலைத்தளத்தில் கூறும்போது, ‘‘புலி படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக விஜய்யின் முதல் தோற்றத்தை வெளியிட திட்டமிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டில் ஒன்று இன்டர்நெட்டில் வெளியாகி இருப்பது படக்குழுவினர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது’’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த ஸ்டில்லை வெளியிட்டவர் யார் என்று விசாரணை நடக்கிறது. 


Post your comment





Related News
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions