'புலி' ஆகஸ்ட் ரிலீஸ் உறுதி...!

Bookmark and Share

'புலி' ஆகஸ்ட்  ரிலீஸ் உறுதி...!

சிம்புதேவன் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் 'புலி' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவது உறுதி என அப்படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு, கிராஃபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த பத்து நாட்களுக்கு முன் பாங்காக், கம்போடியா ஆகிய இடங்களில் நடைபெற்ற பாடல் படப்பிடிப்புடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

ஒரு ஃபேன்டஸியான படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும், மூன்று வேடங்களில் நடிக்கிறார் என்றும், குள்ளமான மனிதனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இதுவரை படத்தின் கதையைப் பற்றி எந்த விஷயமும் லீக் ஆகாமல் உள்ளது. இரண்டு வேடங்களில் நடிப்பது மட்டும் ஏறக்குறைய உறுதி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் படத்தில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு ஜோடி என்கிறார்கள்.

விரைவில் இப்படத்தின் முதல் பார்வையையும், தொடர்ந்து டீசரையும் வெளியிட உள்ளார்கள்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions