புலி டீசர் - நடுநிலை ரசிகர்களின் கருத்து இதுதான்.....

Bookmark and Share

புலி டீசர் - நடுநிலை ரசிகர்களின் கருத்து இதுதான்.....

இந்த வருடம் வெளியாகும் படங்களில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படங்களில் விஜய் நடித்துள்ள புலி படமும் ஒன்று.

சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் வித்தியாசமான இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.  புலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர், அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு 12 மணிக்கு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

அதற்குள் புலி படத்தின் டீசர் திருட்டுத்தனமாக நேற்று வெளியானதால் வேறுவழியில்லாமல் மதியமே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இத்தனை பிரச்சனைகளுக்குப் பிறகு வெளியானாலும் புலி டீசர் பலத்த வரவேற்பைப் பெறத்தவறவில்லை.

புலி டீசர் வெளியாகி முழுசாக 24 மணி நேரம் ஆகவில்லை. அதற்குள்ளாகவே புலி டீஸரை 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்ர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த செய்தியை நீங்கள் படிக்கும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகி இருக்கும்.

மொத்தத்தில் புலி டீஸர் எப்படியிருக்கிறது? சூப்பர் என்று விஜய் ரசிகர்களும்.... சொதப்பல் என்று அஜித் ரசிகர்களும் சொல்லிக்கொண்டிருக்க நடுநிலையான ரசிகர்களோ கோச்சடையான் பார்ப்பதுபோல் உள்ளதாக சொல்கின்றனர்.


Post your comment





Related News
தூய்மை நவிமும்பை திட்டத்தின் தூதராக பாடகர் சங்கர் மகாதேவன் நியமனம்
கத்தி சண்டை திரைப்படத்தில் வாய்பளித்த விஷால் : “வாசுதேவன் குமணன் “
விஷாலின் நண்பனாக கத்தி சண்டையில் அறிமுகமாகும் வாசுதேவன்!
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேலூர் வாசுதேவன் வழங்கும் “பிரகாமியம்”!
பாடகர் சங்கர் மாகாதேவன் மருத்துவமனையில் அனுமதி
சிம்புதேவன் என்ன ஆனார்?
தியேட்டரில் அதிரும் புலி கொண்டாட்டம்…
புலி பிறந்தநாளில் புலி
சிம்புதேவனின் இயக்கத்தில் குள்ளமனிதர்கள்
யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions