ஆரம்பித்தது புலிக்கு தடை!

Bookmark and Share

ஆரம்பித்தது புலிக்கு தடை!

அக்டோபர் 1 ஆம் தேதி வெளிவரவிருக்கும் புலி திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி தஞ்சாவூரில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில், நடிகர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தன்னுடைய தாகபூமி என்கிற குறும் படத்தைப் பெரிய திரைப்படமாக வெளியிடக் காத்திருந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் "கத்தி' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டதாக கூறி முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், நடிகர் விஜய் ஆகியோர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கோரி, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் 2014-இல் வழக்கு தொடுத்தார் அன்பு ராஜசேகர்.

இந்த வழக்கில் ஜனவரி 23-ஆம் தேதி 5 பேரும் ஆஜராக வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் யாரும் ஆஜராகவில்லை என்பதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ச்சியாக பலமுறை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு, வரும் அக்டோபர் 26-ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில், வழக்கு தொடுத்த அன்பு ராஜசேகர், கத்தி பட வழக்கு நிலுவையில் இருக்கும் போது நடிகர் விஜய் நடித்து விரைவில் வெளிவரவுள்ள புலி படத்தையும், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இனிமேல் இயக்கி, தயாரித்து வெளிவரவுள்ள படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு இயக்குநர் முருகதாஸுக்கும், நடிகர் விஜய்க்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions