விஜய்யின் புலி... ஏப்ரல் 14-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்!

Bookmark and Share

விஜய்யின் புலி... ஏப்ரல் 14-ம் தேதி ஃபர்ஸ்ட் லுக்!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் மற்றும் படங்கள் வரும் சித்திரைப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் - ஹன்சிகா, ஸ்ருதிஹான், ஸ்ரீதேவி, சுதீப் நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட பேன்டஸி படம் புலி.

மிக வேகமாக நடந்து வரும் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை விஜய் நடிக்காத புதிய களம் இது என்கிறார்கள் படக்குழுவினர். இந்த நிலையில் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.

அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.வரும் சித்திரைப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி புலி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகின்றன. இந்தப் படத்தில் விஜய் பல கெட்டப்புகளில் தோன்றுகிறாராம்.விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions