புலி படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபு

Bookmark and Share

புலி படத்தில் விஜய்யுடன் இணையும் பிரபு

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புதிய படம் ‘புலி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கி வருகிறார். விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும், ஸ்ரீதேவி கபூர், கன்னட நடிகர் சுதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் தற்போது பிரபுவும் இணைந்துள்ளார். இவர் இப்படத்தில் விஜய்க்கு அறிவுரையாளராக வருகிறாராம். இவர் இப்படத்தில் நடிப்பது படத்திற்கு மேலும் ஒரு பலமாக கருத்தப்படுகிறது.

சமீபத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து இதன் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தினர். அடுத்த கட்டமாக வாகமன் இடத்திற்கு செல்லவுள்ளனர்.

இது கேரளாவில் உள்ள பசுமையான மலை பிரதேசம் ஆகும். அங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வரும் இப்படத்திற்கு நட்டி என்ற நடராஜ் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் விஜய் பிறந்தநாளில் வெளியாகவுள்ளது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions