'புலி' - முத்தக் காட்சி இருக்கிறதா...இல்லையா...?

Bookmark and Share

'புலி' - முத்தக் காட்சி இருக்கிறதா...இல்லையா...?

'புலி' என்று படத்திற்கு பெயர் வைத்தாலும் வைத்தார்கள் படத்தைப் பற்றிய பல வதந்திகள் புலிப் பாய்ச்சலை விட வேகமாகப் பரவுகின்றன. முதலில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றார்கள், பின்னர் அதில் ஒரு கதாபாத்திரத்தில் குள்ளமான மனிதராக நடிக்கிறார் என்றார்கள், அதன் பின் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றார்கள்.

ஆனால், விஜய் அப்படியெல்லாம் நடிக்கவில்லை என்றும் பின்னாடியே வேறு ஒரு செய்தியும் வருகிறது. அதற்கடுத்து படத்தில் ராணியாக நடிக்கும் ஸ்ரீதேவிக்கும் ராஜாவாக நடிக்கும் சுதீப்புக்கும் இடையே முத்தக் காட்சி ஒன்று படத்தில் இருக்கிறதாம். அதற்காகத்தான் ஸ்ரீதேவி கூட சம்பளமாக ஐந்து கோடி ரூபாய் கேட்டார்கள் என்றும் செய்திகள் பரவின.

தற்போது அப்படியெல்லாம் எந்த ஒரு முத்தக் காட்சியும் இல்லை என சுதீப்பே தெரிவித்துவிட்டாராம். அதோடு, எங்கிருந்துதான் இப்படியெல்லாம் செய்திகள் பரவுகின்றன என்றும் அவர் ஆச்சரியத்துடன் கேட்டார் என சாண்டல்வுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், படத்தில் விஜய் மற்றும் ஹன்சிகா, விஜய் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரிடையே முத்தக் காட்சி இருக்கிறதா இல்லையா என்பதுதான் அடுத்த கேள்வியாக கண்டிப்பாக எழப் போகிறது.

ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் என இரண்டு இளம் ஹீரோயின்கள் இருக்கும் போது அவர்களுக்கு முத்தக் காட்சி வைக்காமல், முன்னாள் நாயகியாக ஸ்ரீதேவிக்கு யாராவது முத்தக் காட்சி வைப்பார்களா, இதைக் கூடவா யோசிக்க மாட்டார்கள் என நம்மையே திருப்பிக் கேட்கிறார் கோலிவுட்டில் அனுபவம் வாய்ந்த ஒருவர்.

சீக்கிரமே படத்தைப் பத்தி எதையாவது வெளியில் சொன்னால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் படத்தில் ஒரு புலிக்கு விஜய் முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று இருக்கிறது என எழுதிவிடப் போகிறார்கள்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions