“புலி” படத்திற்க்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்த “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்”

Bookmark and Share

 “புலி” படத்திற்க்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்த   “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்”

தமிழ் திரையுலகின் இன்று உடனடி தேவையை புரிந்து கொண்ட திரு ஆதித்யராம் அவர்கள், “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” என்னும் படப்பிடிப்பு தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவி நடத்தி வருகிறார்

தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் இடமாக தற்போது இவரின் “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” திகழ்ந்துவருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு புகாத படப்பிடிப்புதளமாக இருப்பது ஆதித்யாராம் ஸ்டுடியோஸீற்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.

இருபத்தைந்து ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கிறது. இரண்டு பகுதிகளாக மொத்தம் இருபத்தைந்து ஏக்கரை உள்ளடக்கியது ஆதித்யாராம் ஸ்டூடியோஸ்.

இங்குதான் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட படங்களான உலகநாயகன் கமல் ஹாசனின் “தசவதாரம்” மற்றும் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” படங்களுக்கான அரங்குகள் அமைக்கபெற்று படப்பிடிப்புகள் மேற்கொள்ள பட்டன.

தற்போது இளையதளபதி விஜய், ஹன்சிகா மொத்வானி, ஸ்ருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில், பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் “புலி” படத்தின் படபிடிப்பு பிரத்யேகமாக நடைப்பெற்று வருகிறது. படபிடிப்பு வளாகத்தின் முதல் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் புலி படத்தின் பாடலுக்கான அரங்குகள் அமைக்கபட்டு படபிடிப்பு நடைப்பெற்று வருகிறது.

ஆதித்யாராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஆதித்யாராம் அவர்கள் ஒரு வெற்றி படத்தயாரிப்பாளர். இவர் தயாரித்த “ஏக் நிரஞ்சன்”, “குஷி குஷிகா”, “ஸ்வக்தம்”, “சண்டதே சண்டதே” படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களுக்கு ஏப்ரல் 14-ல் இரட்டிப்பு விருந்து!
2015-ம் வருடத்தில் முதல்நாள் வசூலில் சாதனை புரிந்த படங்கள்!
முடிவுக்கு வந்தது ஸ்ரீதேவி - 'புலி' சண்டை
புலி மொத்த வசூல்: விமர்சனங்கள் கிடைத்தும் இத்தனை கோடியா
புலி நஷ்டத்தால் விஜய்யை நோக்கி படையெடுக்கும் விநியோகஸ்தர்கள்
வெகுண்டு எழுமா புலி; முன்னிலையில் ருத்ரமாதேவி.. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
புலியை அடுத்து புரூஸ் லீ தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
71 கோடி வசூலை குவித்த புலி
100 கோடி வசூலில் புலி? வியப்பில் திரையுலகம்
பிரிட்டனில் மாபெரும் சாதனை படத்த புலி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions