புலி தயாரிப்பாளரின் மூன்று படங்கள்!

Bookmark and Share

புலி தயாரிப்பாளரின் மூன்று படங்கள்!

விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார், ஷிபு தமீம் என்ற கேரள விநியோகஸ்தர் உடன் இணைந்து புலி படத்தை தயாரித்து வருகிறார்.  

தன் பி.ஆர்.ஓ. என்ற அடிப்படையிலேயே அவருக்கு கால்ஷீட் கொடுத்து புலி படத்தில் நடித்தும் வருகிறார் விஜய். புலி படம் விரைவில் வெளியாக உள்ளநிலையில் தன் அடுத்தப் படங்களை திட்டமிட்டுவிட்டார் பி.டி.செல்வகுமார்.

புலி படத்தை அடுத்து மூன்று படங்களை தயாரிக்க இருக்கிறார். இந்தப் படங்களை தயாரிக்க உள்ள இயக்குநர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். இயக்குநர் ஹரி, இயக்குநர் ராஜேஷ் எம், மற்றும் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா ஆகிய மூவர்தான் அவர்கள். அவற்றில் ராஜேஷ் எம் இயக்கும் படம்தான் முதலில் தொடங்கப்பட உள்ளது. இந்தப்படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார்.

அடுத்து  ஹரி இயக்கும் படத்தைத் தயாரிக்க இருக்கிறார். அனேகமாக இந்தப் படத்தில் விஜய் நடிக்கலாம் என்று தெரிகிறது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் இயக்குநரின் படத்திலும் ஜீவாதான் நடிக்கிறார். இந்த மூன்று படங்களையும் பி.டி.செல்வகுமார் தனியாகவே தயாரிக்கிறார்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions